Reading Time: < 1 minute

மானிடோபா மாகாணத்தில் தற்போது கொரோனா நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், மாகாணத்தில் புதிதாக 93 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மானிடோபா மாகாணம் கொரோனா பெருந்தொற்றின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கிய நாள் முதல் இதுவரை மானிடோபா மாகாணத்தில் மொத்தம் 60,294 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை முதல் 366 பேர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், இது நான்காவது அலை என்றே உறுதி செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 93 பேர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.