Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோவில் மாணவர் தங்கும் விடுதிகள், வீடுகளாக கருதப்படும் என மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர் தங்குமிடங்கள் மற்றும் ஓய்வூதிய இல்லங்கள் என்பன வீடுகளாக கணக்கிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பத்து ஆண்டுகளில் 1.5 மில்லியன் வீடுகளை நிர்மானிக்கும் இலக்கினை அடிப்படையாகக கொண்டு மாகாண அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருகின்றது.

மாநகரசபைகளில் வீடுகளை கணக்கெடுக்கும் நடைமுறயைில் மாற்றம் கொண்டு வருமாறு மாகாண அராங்கம் அறிவுறுத்தியுள்ளது.

நகராட்சி நிர்வாகங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஒன்றாரியோ மாகாண வீடமைப்பு அமைச்சர் போல் கெலென்ட்ரா இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் வீடுகள் அதிகளவில் நிர்மானிக்கப்பட்டு வரும் போதும், ஆண்டுக்கான வீடமைப்பு இலக்கு ஒரு லட்சத்தினால் குறைவான எண்ணிக்கையில் பேணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டில் மாகாணத்தில் 109011 வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளில் நீண்ட கால பராமரிப்பு நிலையங்களுக்காக நிர்மானிக்கப்பட்ட 9835 படுக்கைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நீண்ட கால பராமரிப்பு நிலையங்கள் மற்றும் மாணவர் விடுதிகளை வீடுகளாக உள்ளடக்கப்படுவதனை மாகாணத்தின் என்.டி.பி கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.