Reading Time: < 1 minute

இரண்டாம் நிலை மாணவர்களுக்கு மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 9 பில்லியன் டொலர்கள் உதவி தொகைக்கு பொதுச் சபை, அனுமதி வழங்கியுள்ளது.

ஏப்ரல் 22ஆம் திகதி ஆரம்பத்தில் முன்மொழியப் பட்டபடி, தகுதி வாய்ந்த பிந்தைய இடைநிலைக் கல்வி மாணவர்கள் மற்றும் சமீபத்திய பட்டதாரிகள் தங்களது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை தற்போதைய கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்படுவதைக் கண்டவர்களுக்கு இந்த உதவித் தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை ஒரு மாதத்திற்கு 1,250 டொலர்களைப் பெறுவார்கள்.

குறைபாடு உள்ளவர்களுக்கு, அல்லது வேறொருவரை கவனித்துக்கொள்பவர்களுக்கு, அந்தத் தொகை மாதந்தோறும் 1,750 டொலர்களாக அதிகரிக்கிறது.

இப்போது, ஒரு மாற்றுத்திறனாளி அல்லது குழந்தைக்கு, 1,750 டொலர்கள் மாதத்திற்கு 250 டொலர்களால் அதிகரிக்கப்பட்டு, 2,000 டொலர்களாக வழங்கப்படவுள்ளது.

கனடா வருவாய் நிறுவனம் மூலம் பணம் செலுத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.