மனிரோபாவின் கிழக்குப் பகுதியில் விமான விபத்தில் சிக்கிய மூவரைத் தேடும் பணிகள் தாமதடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மிகவும் மோசமாக இருப்பதால், மூவரைத் தேடும் பணிகள் தாமதடைந்து வருவதாக கனேடிய மத்திய பொலிஸ் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வினிப்பெக்கிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் வடகிழக்கே, கடந்த சனிக்கிழமை காலையில் விபத்துக்குள்ளான ‘de Havilland Otter’ ரக விமானம், நீர்ப் பரப்பினுள் வீழ்வதற்கு முன்னர் மரம் ஒன்றிலும் மோதுண்டதை சிலர் அவதானித்துள்ளனர்.
எனினும், சனிக்கிழமை பிற்பகல் வேளையில் குறித்த அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ் விமானத்தின் பயணித்த மூவரின் நிலைக் குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நீர் ஏரிப்பகுதி மற்றும் அதன் கரையோரங்களில் தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அதில் பயணித்த மூவர் தொடர்பாக தடயங்கள் எவையும் கிடைக்கவில்லை என்றும், நீரடி நீச்சல் மற்றும் மீட்புப் படையினரின் தேடுதல்கள் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.