மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலைமையினால் அங்கிருந்து கனடியர்களை மீட்பதற்காக அரசாங்க பணம் செலவிடுவது குறித்து மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கம் முழுவதுமாக செலவிட்டு கனடியர்களை விமானங்கள் ஊடாக அழைத்து வருவதனை அதிக கனடிய மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான நானோஸ் ஆய்வு நிறுவனம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
லெபனான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் தங்கியுள்ள கனடியர்கள் தங்களது சொந்தப் பணத்தில் நாடு திரும்ப வேண்டுமென மக்கள் கருத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பலர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 5 வீதமானவர்கள் மட்டும் அரசாங்கமே முழு செலவினையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.