Reading Time: < 1 minute
கனடாவின் கியூபேக் மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சர் ஜெனிவிவ் குயில்போல்ட், ஐந்து தடவைகள் போக்குவரத்து விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டமைக்காக போக்குவரத்து அமைச்சர் குயில்போல்ட் மன்னிப்பு கோரியுள்ளார்.
காரில் பயணம் செய்த போது இருக்கை பட்டிகளை அணியாது பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சமூக ஊடகங்களில் இந்த விடயம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் குயில்போல்ட் இவ்வாறு இருக்கை பட்டி அணியாது காரை செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய தாம், இவ்வாறு தவறிழைத்தமைக்காக மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.