பேரிடர் காலங்களில் தனித்து அல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய போதே பிரதமர், நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெருக்கமான உலகில் ஒரு பிராந்தியத்தில் நேரிடும் பேரழிவு, மற்றொரு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிடும் வகையில், உள்கட்டமைப்புகள் அமைய வேண்டும் என்றும் இதில் போக்குவரத்து மற்றும் சமூக, டிஜிட்டல் கட்டமைப்பும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
ஐரோப்பா மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை, துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய நிலநடுக்கம் என சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவுகள் சவால்களை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.