Reading Time: < 1 minute

பெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

ஒன்றாரியோவில் தடுப்பூசி வழங்கல் பற்றாக்குறையால் நோர்த் யோர்க், ஸ்கார்பாரோ, ரொறென்ரோ மற்றும் யோர்க்கில் உள்ள மருந்தகங்கள் பொதுத் தடுப்பூசித் தளங்களை மூடுகின்றன. பதிவை இரத்து செய்கின்றன அல்லது நியமனங்களை ஒத்திவைக்கின்றன.

ஸ்கார்பாரோவில் சுமார் 10,000 நியமனங்கள் இரத்து செய்யப்படும். ஏப்ரல் 14ஆம் திகதி இரண்டு மருத்துவமனை மருந்தகங்கள் வழங்கல் சிக்கல்களால் மூடப்படுகின்றன. அவை எப்போது திறக்கப்படும் என்பதற்கான காலக்கெடு தெரியவில்லை..

இதே காரணத்திற்காக நோர்த் யோர்க் பொது மருத்துவமனை ஏப்ரல் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை செனெகா கிராமத்தில் தனது தடுப்பூசித் தளத்தை மூடுகிறது.

பல்கலைக்கழகச் சுகாதார வலையமைப்பில் சந்திப்புக்காக 20,000பேர் பதிவுசெய்ததாகக் கூறப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட மூன்று இடங்களிலுள்ள ரொறென்ரோவாசிகள் தங்கள் பெயரைப் பதிவு செய்ய காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில், பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.