விண்ட்சரில் பெண் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களை, திறமையான வர்த்தக வேலைகளுக்கு ஈர்க்கும் நோக்கில் புதிய திட்டமொன்றினை, மத்திய தொழிலாளர் அமைச்சர் பிலோமினா டாஸ்ஸி அறிவித்துள்ளார்.
கூட்டாட்சி திறமையான வர்த்தக விழிப்புணர்வு மற்றும் தயார்நிலை திட்டத்தின் ஒரு பகுதியான இத்திட்டத்திற்கு, 728,000 அமெரிக்க டொலர்களை மத்திய அரசு முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் அமைச்சர் பிலோமினா டாஸ்ஸி கூறுகையில், ‘பில்ட் எ ட்ரீம் உடனான இந்த திட்டத்திற்கு எங்கள் அரசாங்கத்தின் ஆதரவு உயர்நிலைப் பாடசாலையில் உள்ள விண்ட்சரின் இளம் பெண்கள் திறமையான வர்த்தகத்தில் நல்ல வேலைகளுக்குத் தயாராகவும், தங்களுக்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்கவும், அவர்களின் சமூகங்களை பலப்படுத்தவும் உதவும்’ என கூறினார்.
விண்ட்சர் லாப நோக்கற்ற அமைப்பாக உருவாக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம், கனடா முழுவதும் சுமார் 5,000 பெண்கள் பயனடைவார்கள் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
இத்திட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகளை திறமையான வர்த்தகங்கள் மற்றும் ளுவுநுஆ தொழில் ஆகியவற்றில் தொடர ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகள் வெவ்வேறு வர்த்தகங்களை முயற்சிக்கக்கூடிய எக்ஸ்போக்கள் மற்றும் பட்டறைகளை நிறுவவும், திறமையான நிபுணர்களுடன் அவர்களை இணைக்கும் ஒன்லைன் ஆதாரத்தை அணுகவும் இந்த திட்டம் உதவும்.