Reading Time: < 1 minute

புலம்பெயர்தல் தொடர்பில் கனடாவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதன்முறையாக தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்காக கனடா அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க இருப்பதாக கனடா புலம்பெயர்தல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா என்ன செய்துவருகிறது என சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். கனடாவுக்கு தேவைப்படும் திறன்மிகுப் பணியாளர்களை தக்கவைப்பது தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே நேரத்தில், கனேடியர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான வேலைவாய்ப்புகளையும் பாதுகாப்பது குறித்து பேசியுள்ளார் அவர்.

அத்துடன், அடுத்த கட்ட நடவடிக்கையாக, முதன்முறையாக, கனடாவின் வருடாந்திர புலம்பெயர்தல் திட்டத்தில், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோரையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளர். அதாவது, திறன்மிகுப் பணியாளர்களான தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோரை, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள விடயம், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளது.