Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் (B.C.) உள்ள ஆய்வாளர்கள் இளம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை முறையொன்றை கண்டு பிடித்துள்ளனர்.

வழக்கத்துக்கு மாறான சிகிச்சைகளை கண்டுபிடிக்க உதவும் புதிய முறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த முறையில், நோயாளியின் கட்டிகளை கோழி முட்டைகளில் வளர்த்து, அதிலுள்ள புரதங்களை பகுப்பாய்வு செய்யும் செயல்முறை இடம் பெறுகிறது.

“நாங்கள் சிறுவனின் கட்டியிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து, உருவாக்கும் கோழி முட்டைகளில் நிலைப்படுத்துகிறோம். இது கட்டிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, அதை வளர விடுகிறது,” என்று B.C. குழந்தைகள் மருத்துவமனையின் சிறுவர் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் லிம், தெரிவித்துள்ளார்.

“அதன் பிறகு, நாம் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்தி, அதன் எதிர்வினைகளைப் புரிந்து கொள்ள முடியும்,” என அவர் கூறியுள்ளார்.

இந்த முறையின் மூலம் வழக்கமான சிகிச்சை முறைகளால் குணமடையாத நோயாளிகளுக்கு மாறுபட்ட மருந்துகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகிறது என தெரிவித்துள்ளார்.

“பொதுவாக புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்கும் மருந்துகள் சில நேரங்களில் செயல்படாது.

இவ்வாறு வழக்கமான சிகிச்சை முறைகள் தோல்வியடைந்தால், இந்த புதிய ஆராய்ச்சி அவர்களுக்கு மாற்று வழியைக் காண உதவலாம்,” என்று ஆராய்ச்சியில் பங்குபற்றிய டாக்டர் பிலிப் லாங்கே கூறியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.