Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண அமைச்சர் செலினா ரொபின்சன் மீண்டும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மாகாணத்தின் உயர்கல்வி அமைச்சராக செலினா கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குணமடைந்து விடலாம் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் புற்று நோயினால் மீண்டும் பாதிக்கப்பட்டிருப்பதனை தனது தந்தை மற்றும் தமது பிள்ளைகளுக்கு கூறுவது கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டில் செலினா புற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்திற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாகாண அமைச்சர் செலீனா கோரியுள்ளார்.