வன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தலா 2,500 டொலர்கள் மதிப்புள்ள 150 செயற்கை தலைமுடிகளை 53 வயதான மார்ட்டின் வைகெல்ட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குறித்த நபருக்கு வன்கூவரில் உள்ள டவுன்டவுன் சமூக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
முடி உதிர்தல், புற்றுநோய் அல்லது அலோபீசியா போன்ற நிலைமைகளைக் கொண்ட குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் செயற்கை தலைமுடிகளையே அவர் திருடியுள்ளார்.
1987ஆம் ஆண்டு முதல் 100இற்க்கும் மேற்பட்ட குற்றவியல் தண்டனைகளுடன் ஒப்பிடுகையில், வன்கூவரின் மிகச் சிறந்த குற்றவாளிகளில் ஒருவராக வைகெல்ட் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் விபரிக்கின்றனர்.