Reading Time: < 1 minute

புத்தாண்டில் புதிய வேலைக்காக தயாராகி வந்த 22 வயது கனேடிய இளம்பெண் ஒருவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று சாலை விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் அடையாளம் தெரிந்த நிலையில், தற்போது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 22 வயதான Cecelia Strachan இரவு 10.30 மணியளவில் மேற்கு எட்மண்டனில் 95 அவென்யூவை கடக்கிற போது வாகனம் மோதி குற்றுயிராக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார். இந்த நிலையில், தமது மகள் தொடர்பில் அவரது தாயார் உருக்கமாக சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சிசீலியா தமது நண்பருடன் வெளியேறி புதிய வேலை ஒன்றை புத்தாண்டில் தேடிக்கொள்ள விரும்பியதாகவும், இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவும் அந்த தாயார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடக்கும் ஒரு மணி நேரம் முன்பு தமது மகளிடம் அலைபேசியில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் இரவு விருந்துக்காக சென்றவர் சிசீலியா. நடந்தது ஒரு விபத்து என்றே தாமும் கருதுவதாக அந்த தாயார் தெரிவித்துள்ளார்.