பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோனி ஃபாசி இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா உட்பட, இதுவரை கண்டறியப்படாத பிற நாடுகளில் இது ஏற்கனவே குறைந்த மட்டத்தில் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வைரஸ் பிரித்தானியாவில் இதற்கு முன்னர் பரவியதை விட 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடியது என்றே கூறப்படுகிறது.
எனினும், இது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை எனவும், இது இப்போது உள்ள கொரோனா தடுப்பூசிகளை எதிர்க்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரம், இந்த புதிய வகை கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக உலகம் முழுவதும் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் பிரித்தானியா உடனான போக்குவரத்தை தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.