Reading Time: < 1 minute

ஒன்றாரியோ சமூக வட்டாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் உயர்ந்து வருவதால், முழு மாகாணத்திலிருந்தும் மக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே நெருங்கிய தொடர்பு கொள்ளுமாறு மாகாண அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் இன்று (சனிக்கிழமை) முதல் ஒட்டாவா மற்றும் பீல் பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகள் திறனை 100ஆகக் கட்டுப்படுத்த வேண்டும். ரொறன்ரோ பொது சுகாதாரம் ஏற்கனவே திறனை 75ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இப்போது ஒரு சாப்பாட்டு மேசைக்கு அதிகபட்சம் ஆறு பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் தொடர்புத் தகவலும் தொடர்புத் தடமறிந்து சேகரிக்கப்பட வேண்டும்.

மூன்று தொற்றுநோய் பரவும் பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி மற்றும் உடல்கட்டுக்கோப்பு மையங்களுக்கு, குழு உடற்பயிற்சி வகுப்புகள் இப்போது 10பேர் என மட்டுப்படுத்தப்படும்.

விருந்து அரங்குகள் மற்றும் நிகழ்வு இடங்கள் ஒரு சாப்பாட்டு மேசைக்கு ஆறு பேரைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் 50 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.

ஒன்றாரியோ அடுத்த 28 நாட்களுக்கு மீண்டும் திறக்கப்படுவதை இடைநிறுத்தியுள்ளது. வணிகங்கள், வசதிகள் மற்றும் பணியிடங்கள் உள்ளிட்ட உட்புற பொது அமைப்புகளுக்கான மாகாண அளவிலான கட்டாய முகக்கவசம் உத்தரவையும் அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.