ஜோன்சன் அண்ட் ஜோன்சன் மற்றும் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளின் சமீபத்திய ஒப்புதல்கள், கனடியர்களுக்கு நோய்த்தடுப்பூசிகளை விரைவாகப் பெற உதவும் என தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் நாட்கள் பிரகாசமான நாட்கள். கனடாவின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டங்களுக்கு இந்த வாரம் ஒரு நல்ல வாரமாக உள்ளது.
இரண்டு புதிய தடுப்பூசிகளைச் சேர்ப்பது கனடியர்களுக்கு விநியோக இடையூறுகள் அல்லது பின்னடைவுகளைச் சுற்றியுள்ள கவலைகளைத் தணிக்க உதவும்.
வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்திறனை ஒன்றுக்கொன்று நேரடியாக ஒப்பிட்டுப் பார்ப்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு தடுப்பூசியும் வெவ்வேறு காலங்களில் நடத்தப்பட்ட ஒரு தனி சோதனையில், வௌ;வேறு மக்கள் மற்றும் நிலைமைகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டது. உறைவிப்பான் சேமிப்பு தேவைப்படும் ஃபைஸர்- பயோஎன்டெக் மற்றும் மொடர்னாவால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை விடவும், புதிய தடுப்பூசிகளை எடுத்துச் செல்வது எளிது’ என கூறினார்.