ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் தீர்மானத்திற்கு கனேடிய அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் சில பகுதிகளில் ரஸ்யா பொதுவாக்கெடுப்பு நடாத்துவது குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட போரில் ரஸ்யா தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தோல்வியை மூடி மறைத்துக் கொள்ள தனது வரைபடத்தை மீளப் புதுப்பித்துக்கொள்ள ரஸ்யா முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் ரஸ்யாவுடன் இணைந்து கொள்வதற்கு விரும்புவதாக பொது வாக்கெடுப்பில் வாக்களித்திருந்தனர்.
உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் செலன்ஸீக்கு கனேடிய பிரதமர் ட்ரூடோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூரண ஆதரவினை தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ரஸ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
விரைவில் ரஸ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.