கனடாவின் கல்கரியில் பிறந்து 6 வாரமேயான பச்சிளம் குழந்தையை துஸ்பிரயோகம் செய்த தந்தை மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி குழந்தையின் தாயார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. கல்கரியின் Lethbridge பகுதி மருத்துவமனையில் அந்த குழந்தை தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், Lethbridge பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால் நாம் இச்சம்பவத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.
துணிவுடன் ஒருவர் முன்வந்து இவ்வாறான சம்பவம் நடந்துள்ளதை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது என்றார். தகவல் அறிந்ததும் அப்பகுதி பொலிசார் உடனடியாக தொடர்புடைய குடியிருப்புக்கு ரகசியமாக சென்றுள்ளனர்.
ஜனவரி 18ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், குழந்தை மருத்துவ உதவி அளிக்க வேண்டிய சூழலில் இருந்துள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அவசர மருத்துவ உதவி சேவை வரவழைக்கப்பட்டு, முதலுதவிக்கு பின்னர் அந்த பெண் குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போதும், குழந்தையின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாகவே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைதான 52 வயது தந்தை மற்றும் 31 வயது தாயார் ஆகியோர் விசாரணைக் கைதியாக உள்ளனர்.