Reading Time: < 1 minute

பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் பதவி ஏற்றுக்கொண்டு 45 நாள் மட்டுமே இவர் பிரதமர் பதவியை பகைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையானது கனடாவை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக கனடாவிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் பிரதமர் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த பேச்சு வார்த்தைகள் தற்போதைக்கு நடத்தப்படக்கூடிய சாத்தியம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் கனடாவிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பொருட்கள் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒரு தலைவரை நியமித்து புதிய அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டதன் பின்னரே மீண்டும் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போது காணப்படும் வர்த்தக உடன்படிக்கைகள் அனைத்துமே ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு அமைவானது எனவும் இந்த சட்டங்களில் மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைமையானது கனடாவிற்கும் அந்நாட்டுக்கும் இடையிலான சமூக உறவுகளை வர்த்தக ரீதியான தொடர்புகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இரு ◌நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுவான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.