Reading Time: < 1 minute

பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு 19 சிறார்கள் உயிரிழந்த நிலையில், தற்போது கனடாவில் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Strep A பாதிப்பு
கனடாவின் மாண்ட்ரீலில் Strep A பாதிப்புக்கு இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Strep A பாதிப்புக்கு மாண்ட்ரீலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், சிறார்களில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் துரித நடவடிக்கை முன்னெடுக்குமாறு சுகாதார நிபுணர்களை பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நவம்பர் மத்தியில் இருந்தே நால்வருக்கு Strep A பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதே நவம்பர் மாதம் 2017 முதல் 2021 வரையில் மாண்ட்ரீலில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் Strep A பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் , பிரித்தானியாவில் 19 சிறார்கள் Strep A பாதிப்புக்கு பலியாகியுள்ளதை தீவிரமாக கண்காணித்து வருவதாக கனடாவின் பொது சுகாதாரத்துறை இந்த மாத துவக்கத்தில் தெரிவித்திருந்தது.

பிரித்தானியா, கனடா மட்டுமின்றி மேலும் 5 நாடுகளில் உறுதி
Strep A பாதிப்பு என்பது பிரித்தானியா, கனடா மட்டுமின்றி மேலும் 5 நாடுகளில் உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் பொதுவாக காணப்படும் தொற்று தான் இந்த Strep A. ஆனால் ரத்தத்தில் கலந்தால் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அத்துடன் உடல் உறுப்புகளை சேதப்படுத்தும் எனவும் கூறப்படுகின்றது.

காய்ச்சல், தொண்டை வலி, புண், உடல் சோர்வு, அசதி, நிமோனியா மற்றும் இரத்த தொற்று உள்ளிட்டவை Strep A பாதிப்பு அறிகுறிகளாக கூறப்படுகிறது.