Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lillooet பகுதிக்கு அருகே ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் சிக்கிய நிலையில், நீண்ட ஒருவாரகால தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் தற்போது மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை உடற்கூராய்வாளர் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்கி மாயமான நான்காவது நபர் தொடர்பிலும் தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

இருப்பினும் ஏமாற்றமே மிஞ்சியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்குப் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மண்சரிவில் சிக்கியவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நிலையில் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீட்கப்பட்ட மூன்று ஆண்களின் அடையாளங்களை கண்டறியும் நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.