கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், வருவாய் குறைந்து வருவதால், பிரிட்டிஷ் கொலம்பியா போவன் தீவின் (Bowen Island) அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும், பொது போக்குவரத்து நிறுவனமான டிரான்ஸ்லிங் இடைநிறுத்தியுள்ளது.
போவன் தீவின் பேருந்து வழித்தடங்கள், 280 ஸ்னக் கோவ்-புளூவாட்டர், 281 ஸ்னக் கோவ்-ஈகிள் கிளிஃப், மற்றும் 282 மெட் கார்ட்னர்-ஸ்னக் கோவ் ஆகியவை மே 2ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக டிரான்ஸ்லிங் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிரான்ஸ்லிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறைந்த அளவில் பயணிப்பவர்களின் காரணமாக பாதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 280 மற்றும் 281 பாதைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 20 போர்டிங் குறைவாக உள்ளன. 282 பாதை வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் இயங்குகிறது’ என தெரிவித்துள்ளது.
டிரான்ஸ்லிங்க் இப்போது எதிர்கொள்ளும் முன்னோடியில்லாத நிதி சவால்கள் காரணமாக தற்காலிக இடைநீக்கம் அவசியம் என்று டிரான்ஸ்லிங்க் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக, பயணிப்பவர்களின் எண்ணிக்கை 83 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக மாதத்திற்கு 75 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்றும் நிறுவனம் கூறுகிறது.