பிரிட்டிஷ் கொலம்பிய காட்டு தீ சேவை இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
வறட்சியான மற்றும் வெப்பத்துடரான காலநிலையினால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பகுதியில் இந்த நிலை அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது நிலவி வரும் காலநிலையானது பலத்த காற்றையும் இடி மின்னல் தாக்குதல்களையும் உருவாக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமையானது மேலும் காட்டுத்தீ பரவுகையை அதிகரிக்கும் எனவும் வேகமாக காட்டுத்தீ பரவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக இவ்வாறு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாகாணம் முழுவதிலும் சுமார் 370 இடங்களில் காட்டுத்தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இவற்றில் சுமார் 150 இடங்களில் காட்டுத்தீ கட்டுக்கடங்காத வகையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் இடி மின்னல் தாக்கம் காரணமாக காட்டு தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.