கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மித மிஞ்சிய அளவில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளுதல் அல்லது சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகிய காரணிகளினால் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த மே மாதம் 176 பேர் இவ்வாறு உயிரிழந்து உள்ளதாகவும் இதன் அடிப்படையில் மொத்தமாக மே மாதம் இறுதி வரையில் ஒழுங்கு படுத்தப்படாத மருந்து வகைகள் அதிக அளவில் பயன்படுத்தியதனால் 1018 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 10 முதல் 59 வயது வரையிலான மக்கள் பிரிவில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் காரணியாக இந்த ஒழுங்குபடுத்தப்படா மருந்துப் பொருள் பயன்பாடு அமைந்துள்ளது.
கொலைகள், தற்கொலைகள், விபத்துக்கள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற காரணிகளினால் ஏற்படும் மரணங்களை விடவும் போதை மருந்து மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மருந்து வகைகளை மிதமிஞ்சிய அளவில் பயன்படுத்துவதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
மலிவானது என்ற காரணத்திற்காக ஒழுங்குபடுத்தப்படாத மருந்துகளை மித மிஞ்சிய அளவில் பயன்படுத்தல் மற்றும் போதைப் மாத்திரை பயன்பாடு என்பனவற்றினால் பாரியளவு பாதிப்புக்கள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.