Reading Time: < 1 minute
கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்மஸ் விடுமுறைக்காலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் இரவுக் கேளிக்கை கொண்டாட்டம் என்பனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை உணவகங்கள், கடைகளில் அமர்ந்து உணவருந்துவோர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் இன்று முதல் நடைமுறைக்கும் வரும் இந்த தற்காலிக கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.