Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக 45பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் ஃபார்ன்வொர்த், பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாண அவசரகால நிலையை அறிவித்த அதே நாளில் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதன்மூலம் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏழு பிரிட்டிஷ் கொலம்பியர்கள் உயிரிழந்துள்ளனர். 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர்.

வன்கூவரின் வெஸ்ட் எண்டில் உள்ள ஹரோ பார்க் மையம், ஒரு நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர் சம்பந்தப்பட்ட ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவினை உறுதி செய்துள்ளதாக மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.