பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிதாக ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.
இதில் இருவர் வடக்கு வன்கூவரில் உள்ள லின் வேலி பராமரிப்பு மையத்துடன் தொடர்புடையவை எனவும், பாதிக்கப்பட்ட இருவருமே வீட்டில் குணமடைந்து வருவதாகவும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் உயர் மருத்துவர் டாக்டர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பயணத்திலிருந்து திரும்பும் மக்களுடன் பல பேர் தொடர்புடையதாகவும், இதில் மூன்று பேர் எகிப்துக்கு பயணம் செய்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனா, ஈரான், இந்தியா, ஹொங்கொங் மற்றும் அமெரிக்கா-வொஷிங்டன் ஆகிய நாடுகளுக்கும் சென்றவர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 114 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால், 4,291 பேர் உயிரிழந்துள்ளனர். 118,000இற்க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.