பொது பிரிட்டிஷ் கொலம்பியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரில் கற்றல் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேம்பட்ட கல்வி மற்றும் திறன் பயிற்சி அமைச்சர் அன்னே காங், மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி, அனைத்து பொது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கு இந்த செப்டம்பரில் வளாகக் கல்விக்கு முழுமையாக திரும்பத் தயாராகுமாறு அறிவுறுத்தியதாக கூறினர்.
அன்னே காங், இந்த வளர்ச்சியை ஊக்கமளிக்கும் என்று சொன்னாலும், சிலர் திரும்பிச் செல்லப் பதற்றமாக இருப்பார்கள் என்று தனக்குத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
உங்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. ஒவ்வொரு கட்டத்திலும், டாக்டர் ஹென்றி மற்றும் எங்கள் அனைத்து கூட்டாளர்களுடனும் நாங்கள் பணியாற்றப் போகிறோம், மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சரியான நடவடிக்கைகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த என்று அவர் கூறினார்.
இந்த கட்டத்தில், புதிய பிந்தைய இரண்டாம் நிலை கொவிட்-19 முன்னோக்கிச் செல்லல் வழிகாட்டுதல்களை உருவாக்க டாக்டர் ஹென்றியுடன் ஒரு குறிப்பிட்ட குழு செயற்படும்.
வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை நாங்கள் புதுப்பிக்கும்போது, செப்டம்பர் மாதத்தில் மாணவர்கள் மற்றும் குடும்பங்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு வளாகத்தில் நேரில் பயில்வதற்குத் திட்டங்களைத் தொடங்க ஊக்குவிக்கிறேன் என்று அன்னே காங் கூறினார்