Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவொன்றால் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சில இடங்களில் வாழ்வோர் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Chilcotin நதியில், நிலச்சரிவால் மண் விழுந்து, தண்ணீரை தடுத்து நிறுத்தி, அணை ஒன்றை உருவாகிவிட்டது.

நீர் வரத்து அதிகமாவதால், அந்த அணையையும் தாண்டி தண்ணீர் வெளியேறத் துவங்கியுள்ளது.

ஆகவே, Chilcotin மற்றும் Fraser நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஆகவே, இந்த இரண்டு நதியோரமும் வாழும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

நதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், சுமார் 61 மில்லியன் கியூபிக் மீற்றர் அளவுக்கு தண்ணீர் குவிந்துள்ளது.