பிரம்டனில் ஆயுதங்களுடன் கோஷ்டி மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 30 ஆண்கள் இந்த மோதலில் தொடர்பட்டிருந்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டெவ்சயிட் ட்ரைவ் மற்றும் பிராமெலியா வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோதலுக்காக பயன்படுத்தப்பட்ட சில ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
என்ன காரணத்தினால் மோதல் ஏற்பட்டது என்பது பற்றியோ தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றியோ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய தகல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றிய தகவல்கள் ஏதும் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.