Reading Time: < 1 minute

கனடாவின் பிரதமர் பதவிக்கும் லிபரல் கட்சி தலைமை பதவிக்கும் போட்டியிடுவதாக முன்னாள் பிரதிப் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப் ஃப்ரீ லேண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமூக ஊடக ஒன்றின் மூலம் கிறிஸ்டியா, தான் பிரதமர் பதவி மற்றும் லிபரல் கட்சித் தலைமை பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கார்பன் வரி அறவீடு உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை எடுக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி கனடிய பிரதமர் ஜஸ்டின் டுடே லிபரல் கட்சியின் தலைமை பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.