பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாறவுள்ளநிலையில், அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள் இந்த மாற்றத்தின் மூலம் தமது பதவிகளை இழக்க உள்ளனர்.
அமைச்சர் நவ்தீப் பைனஸ் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ள நிலையில் அவர் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப் சாம்பெயின், பைனஸ் வகித்த கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சை ஏற்க உள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் மார்க் கன்ரூ, புதிய வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் புதிய போக்குவரத்துத்துறை அமைச்சராக ஒமர் அலகப்ரா பதவி ஏற்க உள்ளார்.
இதன் பின்னர் கொவிட்-19 காரணமாக, முதலாவது மெய்நிகர் அமைச்சரவை அமர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் நிதியமைச்சர் பில் மொர்னோபதவி விலகிய பின்னர் கடந்த ஒகஸ்ட் மாதம் ட்ரூடோ தனது அமைச்சரவையை மாற்றியிருந்தார். அந்த நேரம் நிதியமைச்சராக கிறிஸ்டியா பிரீலேண்ட் பதவி ஏற்றிருந்தார்.