Reading Time: < 1 minute
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், டொரோண்டோ நகரமுதல்வர் ஜோன் டோரியும் இன்று சந்தித்து, துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
அக்டோபர் தேர்தல் காலத்தில், டொரொண்டோவுக்கு நன்மையளிக்கும் வகையில், ஆளும் லிபரல் கட்சி முன்வைக்கவுள்ள வாக்குறுதிகள் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
ஒண்டாரியோ மாகாண அரசும், டொரோண்டோ மாநகரசபையும் இணைந்து, துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்காக, டொரோண்டோ காவல்துறைக்கு 4.5 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அறிவித்துள்ள நிலையில், இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டை காவல்துறை தலைமை அதிகாரி மார்க் சௌண்டெர்ஸ் வரவேற்றுள்ளார்.