கனடாவின் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் மூன்றாவது நாளாகவும் விமானப் பயணங்கள் தாமதமானதாகவும் ரத்து செய்யப்பட்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகின்றமையே இதற்கு காரணமாகும்.
கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் 80 பேருடன் வந்த விமானம் தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இதனால் பியர்சன் விமான நிலையத்தின் ஐந்து ஓடுதளங்களில் இரண்டு மூடப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர், இவர்களில் 19 பேர் தற்பொழுது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
கனடிய போக்குவரத்து பாதுகாப்பு குழு (TSB) விபத்து தொடர்பாக விரிவான ஆய்வை நடத்தி வருவதால், விமானத்தின் எஞ்சிய பாகங்கள் குறைந்தபட்சம் 48 மணி நேரம் ஓடுதளத்தில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தில் பெரும் அளவில் தாமதங்களும் ரத்து செய்வதுமாக காணப்படுகின்றது.
புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, பியர்சன் விமான நிலையத்தில் புறப்படும் விமானங்களில் 5% மற்றும் வருகை தரும் விமானங்களில் 6% ரத்து செய்யப்பட்டுள்ளன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.