Reading Time: < 1 minute
கனடாவின் பிரதான விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையத்தின் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல பயணிகளது பயணப் பொதிகள் தொலைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான குளிருடனான காலநிலையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சில பயணிகள் தங்களது பயணப் பொதிகளுக்காக சில நாட்கள் காத்திருக்க நேரிட்டுள்ளது.
பயணிகளின் பொதிகளை காவிச் செல்லும் இயந்திரப் பட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு பயணப் பொதிகள் கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பயணப் பொதிகள் காணாமல் போனமை தொடர்பில் விமானப் பயணிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.