Reading Time: < 1 minute

கனடாவின் பிக்ரிங் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாதம் ஆரம்பத்தில் மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பலமுரளி மற்றும் டொரொண்டோவைச் சேர்ந்த பிரன்னன் பலசேகர் (வயது 24) ஆகியோர், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிக்கிடையே ஒரு சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

முதலில், அவர்கள் இருவரும் மார்ச் 8 ஆம் திகதி ஒரு கொலை சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டனர்.

அப்போது, டொரொண்டோ பொலிசார், பிக்ரிங் நகரில் ஏன் விசாரணை நடத்தினார்கள் என்பதைக் குறித்துப் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை.

இந்த வாரம் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, அவர்கள்மீது மேலும் மூன்று கொலை சதி குற்றச்சாட்டுகள் மற்றும் இரண்டு சொத்துத் திருட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள், இந்த வழக்கு ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பேக்கரி மற்றும் பிக்ரிஙில் உள்ள இரண்டு உணவகங்களோடு தொடர்புடையது என குறிப்பிடுகின்றன.

கோகிலன் பலமுரளே மற்றும் பிரன்னன் பலசேகர் ஏப்ரல் 11 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.