Reading Time: < 1 minute

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கத் தயார் என கனேடிய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல், வடகொரியாவின் ஆயுத பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அச்சுறுத்தல்களை கையாளக்கூடிய ஆற்றல் கனடாவிடம் உண்டு என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேட்டோ கூட்டுப் படையினருக்கும், உக்ரைனுக்கு உதவி செய்யம் அதேவேளை, இந்தோ பசுபிக் பிராந்திய வலயத்தில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதே கனடாவின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா நேச நாடுகளுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஸ்ய சட்டவிரோதமாகவும் நீதியற்ற வகையிலும் இறைமையுடைய நாடான உக்ரைன் மீது படையெடுத்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உக்ரைனுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பதாக அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.