Reading Time: < 1 minute

கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.