பாகிஸ்தானுக்கான பயணங்கள் தொடர்பில் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய அரசாங்கம் புதிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பருவப்பெயர்ச்சி மழை காரணமாக பாகிஸ்தானில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் பாகிஸ்தானுக்கான பயணங்களை மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளுமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் தங்கியிருக்கும் கனேடியர்கள் உள்நாட்டு ஊடகங்களின் தகவல்களை உன்னிப்பாக அவதானிக்குமாறும், எல்லா நேரங்களிலும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாதைகள், பாலங்கள், வீதிகள் உடைந்துள்ளதாகவும் பயணங்களை மேற்கொள்ளும் போது கனேடியர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் கனடா கோரியுள்ளது.