பலஸ்தீன மக்களுக்கு சுமார் 50 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்களுக்கு இடையில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ப்பட்டு வருகின்றன.
அதன் ஓர் கட்டமாக கெய்ரோவில் சமாதான மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த சமாதான மாநாட்டில் கனடாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அஹமட் ஹ_செய்ன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த இரண்டு அமைச்சர்களும் ஏற்கனவே கெய்ரோவை சென்றடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான நிவாரணமாக பலஸ்தீன மக்களுக்காக மேலும் 50 மில்லியன் டொலர்களை உதவிகள் வழங்கப்படும் என அறவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிகள் ஹமாஸ் தீவிரவாதிகளை சென்றடையாது என்பது உறுதி செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மருத்துவ வசதிகள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட சிவிலியன்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.