பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தினால் மக்கள் அடிமைகளாகவும், துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்ட கால காவலில் வைக்க அனுமதிக்கும் வகையில் இந்த சட்டம் காணப்படுவதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட மிகவும் கடுமையானது என்றும் கூறியுள்ளார்.
இந்த சட்டமூலத்தை ஆதரிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் நாட்டிற்கும் அதன் மக்கள் மீதும் அன்பு இல்லாதவர்களாக கருதப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளிலிருந்து விலகி, சட்டமூலத்தில் பயங்கரவாதத்தின் பரந்த வரையறை குறித்தும் கர்தினால் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
பாதிப்பில்லாத செயல்களும் பயங்கரவாத செயல்களாக வகைப்படுத்தலாம் என்பதனால் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதத்தின் வரையறை சர்வதேச தரங்களுடன் ஒத்துப்போவதன் அவசியத்தை வலியுறுத்திய பேராயர், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறக்கூடிய விதிகளை அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.