Reading Time: < 1 minute
பனிப்புயல் காரணமாக ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பன இவ்வாறு மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோ, பீல், ஹால்டன், யோர்க், டர்ஹம், ஹமில்டன் நயகரா, மோன் அவனியர், மற்றும் சிம்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகங்களும் மூடப்படுவதாகவும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பிராந்தியத்தில் பாரியளவு பனிப்பொழிவும் பனிப்புயல் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இந்த சீரற்ற காலநிலையினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.