கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டில் நிலவும் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக, இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை பயன்படுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பதவி விலகும் நிலையில் கனடா பிரதமர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக கோரிக்கை வலுத்துவருகிறது. எதிர்க்கட்சிகள், மக்கள் மட்டுமின்றி, அவர் சார்ந்த கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.
கனடாவின் நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்டும் வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraserம் பதவி விலகினார்கள்.
ட்ரூடோ கட்சித் தலைமையில் நீடிப்பாரா அல்லது பதவி விலகுவாரா என்பதை அறிவதற்காக, அவருக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது என்பது குறித்து விவாதிக்க, ட்ரூடோ சார்ந்த லிபரல் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் பதவி விலகக்கூடும் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
இதற்கிடையில், நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், உள்நாட்டில் நிலவும் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக, ட்ரூடோ இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை பயன்படுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.