கனேடிய நிதியமைச்சர் பில் மோர்னோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தொண்டு நிறுவனமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தொண்டு நிறுவனத்தின், செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக வௌிநாடுகளுக்கு சென்ற பிரயாணக் கட்டணத்தை நிதியமைச்சர் மோர்னோ செலுத்தவில்லை என்ற விடயம் வௌியாகியிருந்தது.
இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரயாணச் செலவான 41,000 கனேடிய டொலர்களை தாம் திருப்பிச் செலுத்தவில்லை என்பதை அண்மையிலேயே உணர்ந்ததாகவும் அதன் பின்னர் காசோலையொன்றை எழுதியுள்ளதாகவும் கனேடிய நிதியமைச்சர் பில் மோர்னோ கூறியுள்ளார்.
குறித்த தொண்டு நிறுவனத்துடனான, தன்னுடையதும் தமது குடும்பத்தினரதும் தொடர்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் விசாரணைகளை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.