காரணம் என்ன? கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் காலை 7.00 மணிக்கே மதுபானசாலைகள் மற்றும் ரெஸ்டூரன்ட்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டாரில் நடைபெறும் உலக கிண்ணப் போட்டித் தொடரை கண்டு களிக்கும் ரசிகர்களுக்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாகாணம் தழுவிய ரீதியில் இவ்வாறு மதுபான விற்பனை செய்ய விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டாருக்கும் ஒன்றாரியோவிற்கும் இடையில் எட்டு மணித்தியாலங்கள் நேர வித்தியாசம் காணப்படுகின்றது.
கனேடிய கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகாலை வேளையில் சில போட்டிகளை கண்டு களிக்க நேரிட்டுள்ளது.
இதனால் மதுபானசாலைகள் மற்றும் ரெஸ்டுரன்ட்களில் வழமையான நேரத்திற்கு முன்னரே மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாகாண அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு மதுபான விற்பனையாளர்கள் நன்றி பாராட்டியுள்ளனர்.