Reading Time: < 1 minute

UPDATE – 2 கனடாவின் நோவா ஸ்கோட்டியா பிராந்தியத்தில் துப்பாக்கிக்தாரி ஒருவர் நடத்திய 12 மணிநேரத் தாக்குதலில், பொலிஸ் அதிகாரி உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் 23 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

UPDATE – 1 கனடாவின் நோவா ஸ்கோட்டியா பிராந்தியத்தில் துப்பாக்கிக்தாரர் ஒருவர் நடத்திய 12 மணிநேரத் தாக்குதலில், பொலிஸ் அதிகாரி உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல் மருத்துவத் துறையில் பணிபுரிந்த 51 வயது கேப்ரியல் வோர்ட்மன் எனும் நபர் வெவ்வேறு இடங்களில் அதிகாரியின் சீருடையைப் போன்ற ஆடைகளை அணிந்து, துப்பாக்கிச்சூடு நடத்தியதாக றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த கொலைகள் பயங்கரவாதம் தொடர்பானவை என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த நபர், சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

மேலும் 1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடாவில் நடத்தப்பட்ட மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமாக இது கருதப்படுகிறது.