Reading Time: < 1 minute

நோவா ஸ்கோடியாவில் திங்கட்கிழமை புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகவில்லை என சுகாதார அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

கியூஈஐஐ சுகாதார அறிவியல் மையத்தின் நுண்ணுயிரியல் ஆய்வகம் ஞாயிற்றுக்கிழமை 498 நோவா க்ஷ்கோட்டியா சோதனைகளை நிறைவு செய்தது. புதிய பாதிப்புகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

80 வயதிற்கு மேற்பட்ட ஒருவரின் இறப்புடன், கொவிட்-19 இன் இரண்டு புதிய பாதிப்புகள் மாகாணத்தில் கடைசியாக அறிவிக்கப்பட்டன. இறப்பு மற்றும் புதிய பாதிப்புகள் அனைத்தும் நோவா ஸ்கோடியா சுகாதார ஆணையத்தின் வடக்கு மண்டலத்தில் பதிவாகியுள்ளன.

இரண்டு சமீபத்திய பாதிப்புகள் பொது சுகாதார விசாரணையில் உள்ளன. ஆனால் அவை முந்தைய பாதிப்புகளுடன் தொடர்புடையவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை நோவா ஸ்கோடியா 71,479 எதிர்மறை சோதனை முடிவுகளைக் கொண்டுள்ளது.

நோவா ஸ்கோடியாவில் 1,080 உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்- 19 பாதிப்புகள் உள்ளன. ஆனால் இப்போது 1,008 பாதிப்புகள் தீர்க்கப்பட்டதாகக் கருதப்படுகின்றன. மேலும் 65பேர் இறந்துள்ளனர். நோவா ஸ்கோடியாவில், தற்போது ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாகாணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் 10 வயது முதல் 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகும்.