Reading Time: < 1 minute
நோர்த் யோர்க்கில் வாகனமொன்றில் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கேம்பர் வாகனமொன்று எரிந்த நிலையில் அதிலிருந்து குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நோர்த் யோர்க்கின் விக்டோரியா பார்க் அவன்யூ மற்றும் எக்லிங்டன் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமையில் அமைந்துள்ள மளிகைக் கடையொன்றுக்கு அருகாமையில் இந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்ருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகனம் பற்றி எரிவதனை அறிந்து கொண்ட தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
அதன் போது வாகனத்தின் உள்ளே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.