Reading Time: < 1 minute

கனடாவின் டொரன்டோ நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

TTC பஸ் ஒன்றும் வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு காயம் அடைந்தவர்களில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸில் பயணம் செய்த சாரதி உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காரில் பயணம் செய்தவர்களும் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.